தீக்குள் விரலை விடுகிறதா தமிழக அரசு, கக்கூஸ் ஆவணப்பட பெண் இயக்குனர் திடீர் கைது… - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தீக்குள் விரலை விடுகிறதா தமிழக அரசு, கக்கூஸ் ஆவணப்பட பெண் இயக்குனர் திடீர் கைது…

'கக்கூஸ்' என்ற ஆவணப்படத்தை எடுத்த இயக்குநர், சமூக செயற்பாட்டாளர் திவ்யபாரதியை தமிழக போலீசார் மதுரையில் இன்று கைது செய்தனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த திவ்யபாரதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மதுரை போலீசார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திவ்யபாரதியை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடன் படித்து வந்த சக மாணவரின் உடலை வாங்க மறுத்து அவர் சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட திவ்யபாரதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துள்ளார்.
பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

About UK TAMIL NEWS