யாழ் ரயிலில் மோதுண்டு தனியார் பேருந்து சாரதி பலி..! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

யாழ் ரயிலில் மோதுண்டு தனியார் பேருந்து சாரதி பலி..!

நேற்று இரவு மாங்குளம், குஞ்சுக்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு வவுனியாவைச் சேர்ந்த தனியார் பேருந்து சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு சம்பவ இடத்திலே இவர் உயிரிழந்துள்ளார். ,
நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து வவுனியாவில் நேற்று தனியார் பேரூந்து சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து மாங்குளம் பகுதியிலுள்ள குஞ்சுக்குளத்தில் தனது உறவினரின் வீட்டிற்குச் சென்றிருக்கையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான மரியசெல்வன் மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.

About UK TAMIL NEWS