அதிசய! நிகழ்வு: மாய சடங்குக்குப் பிறகு சடலத்தைத் மீண்டும் கொண்டுவந்து தந்த முதலை!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அதிசய! நிகழ்வு: மாய சடங்குக்குப் பிறகு சடலத்தைத் மீண்டும் கொண்டுவந்து தந்த முதலை!!

முதலை வசிய வேலை செய்யும் நபர் ஒருவர் செய்த மாயச் சடங்குக்குப் பிறகு, தான் இழுத்துச் சென்று கொன்ற ஒருவரின் சடலத்தை மீண்டும் நிலப்பகுதிக்கு கொண்டுவந்த ஒரு முதலையின் விடியோ காட்சி இந்தோனேஷியாவில் வைரலாக பரவி வருகிறது.
41 வயது சையரிஃபுதின், கிழக்கு ஜகார்தாவில் இருந்து 1,500 கி.மீ. தூரத்தில் உள்ள கிழக்கு களிமந்தானில் உள்ள பெராவு பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றதாகவும் அப்போது அவரை இரண்டு மீட்டர் நீளமுள்ள ஒரு முதலை, ஆற்றில் நீண்ட தூரம் இழுத்துச் சென்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் கூறின.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சையரிஃபுதினின் நண்பர், உள்ளூர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
ஆனால், சையரிஃபுதினை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மறுதினம், உள்ளூர் கிராமவாசிகள் முதலையை வசியப்படுத்தும் வேலை செய்யும் நபரின் உதவியை நாடினர்.
இதையடுத்து ஆற்றுக்கரைக்கு அந்த நபர் வந்து ஒரு சடங்கை செய்ததும், தனது வாயில் கௌவியிருந்த சடலத்துடன் வந்த முதலை, அதை கரை அருகே விட்டுச் சென்றது.
ஆனால் அந்த முதலைதான், சையாரிபுதீனைக் கொன்ற முதலையா என்பது தெரியவில்லை

About UK TAMIL NEWS