விரைவில் கல்யாண சித்தி பெற மந்திரம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

விரைவில் கல்யாண சித்தி பெற மந்திரம்

வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.
தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.
இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.

மந்திரம்
ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருதயம்
மம வசம் ஆக்ருஷ்ய சுவாஹா !

About UK TAMIL NEWS