அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தற்காலிகமாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா இருவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளமையை நிரூபித்து விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து குறித்த இரு அமைச்சர்களையும் தாமாக பதவியிலிருந்து விலகுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதனால் கடந்த காலங்களில் வடக்கு அரசியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடைபெற்றிருந்தன.
இந்த நிலையில் இரு அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்த நிலையில் குறித்த இரு அமைச்சுப்பதவிகளையும் வடமாகாண முதலமைச்சர் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

About UK TAMIL NEWS