கிளிநொச்சியில் விபத்து இளைஞர்கள் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து இளைஞர்கள் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்!

இன்று பிற்பகல் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் ஒரு இளைஞனின் கால் முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
டிப்போ சந்தியில் இருந்து கனகபுரம் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் அம்பாள் குள வீதியில் இருந்து கனகபுரம் பிரதான பாதைஊடாக டிப்போ சந்திப்பக்கமாக திரும்பிய கயஸ் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதனாலையே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது
அத்துடன் மோட்டர் சைக்கிலில் வந்தவர்களின் அதிவேகமே இவ் விபத்துக்குக் காரணம் என்பது விபத்து நடந்த இடத்திற்கு முன்னால் உள்ள செல்லா கோட்டலில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ள காட்சியில் அறியக்கூடியதாக உள்ளது

About UK TAMIL NEWS