வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (16.06) மதியம் 12.30 மணியளவில்கஞ்சாவுடன் இராணுவ வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி அக்கராயன் இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் தரங்ககுமார செனவிரத்ன ( வயது – 33) என்பவரே இன்று கைது செய்யப்பட்டவராவார்.
இன்று விடுமுறையைடுத்து அவரது சொந்த ஊரான மதவாச்சிநோக்கி பேரூந்தில் பயணித்த சமயத்தில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசியதகவலின் அடிப்படையில் இன்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்துநிலையத்தில் வைத்து 16பையில் பொதி செய்யப்பட்ட 25கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரரை நாளைய தினம் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

About UK TAMIL NEWS