யோஷித ராஜபக்ஷவுக்கு கடற்படையில் பணியாற்றிய காலத்தில் 51 இலட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம்!

 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் 5,150,626 ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த தொகையில் மேலதிக கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படவில்லை என்றும் சாட்சியமளித்த அதிகாரி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.