இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷும் நடித்துள்ளனர். சுமார் ரூ. 2,000 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், படத்தின் ஆங்கிலப் பதிப்புக்கான ப்ரீமியர் திரையிடல் இன்று நடைபெற்றதாகவும், அதனைப் பார்த்தவர்கள் தங்களது ஆரம்பகட்ட கருத்துகளைப் பகிர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளியாகியுள்ள ஆரம்பகட்ட விமர்சனங்களின்படி, இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக யஷ் ஏற்றுள்ள ராவணன் கதாபாத்திரம் குறிப்பிடப்படுகிறது. அவரது கதாபாத்திரம் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், யஷ் தனது நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், படத்தில் நடித்துள்ள ஏனைய நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், படம் குறித்த ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முழுமையாக ஈடுகொடுக்கிறதா என்பது தொடர்பில் கலவையான கருத்துகள் வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது.
எனினும், இவை ஆரம்பகட்ட விமர்சனங்கள் மட்டுமே என்பதால், படத்தின் முழுமையான வரவேற்பைத் தீர்மானிக்க அதிகாரபூர்வ விமர்சனங்களும் பார்வையாளர்களின் கருத்துகளும் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
