களுத்துறை நாகொட இரட்டைக் கொலைச் சம்பவம்: மூன்று சந்தேகநபர்கள் கைது





களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வந்த விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (15) இரவு மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 24, 26 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் களுத்துறை தெற்கு மற்றும் அகலவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று, இரண்டு கைத்தொலைபேசிகள், ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி ஒன்று என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய விடயங்களைக் கண்டறியும் நோக்கில், களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.