கல்முனை பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைத் தவிர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பொது அமைப்புகள் ஊடாகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் இலங்கைத் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் ஆதரவுடன், சவூதி அரேபியாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில், சிலரால் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளிக் கலந்துரையாடல்களிலும் வெளியிடப்படும் கருத்துகள் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையில் அமைவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, சிவராசா அனோஜன் தொடர்பில் அவதூறான கருத்துகளை வெளியிடுவதையும், விஷமத்தனமான பேச்சுகள் மற்றும் முகநூல் பதிவுகளைப் பகிர்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
.jpg)