அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து: இலங்கை அரசின் முயற்சிக்குப் பலன்.........

 



சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டின் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவலை அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 2026 ஒக்டோபர் 13ஆம் திகதி சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் மரண தண்டனை தொடர்பான தீர்ப்பை ரத்து செய்துள்ளதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்த இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளின் பலனாக இந்தத் தீர்மானம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளமை அனோஜன் சிவராசாவுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளதாகவும் அருண் ஹேமச்சந்திரா சுட்டிக்காட்டியுள்ளார்.