கண்டி மாவட்டத்தின் அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் சிமென்ட் கலவை வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மற்றும் வீதியில் சென்றவர்கள் மீது மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தக் கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இவ்விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களின் நிலைமை மற்றும் விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகி வருகின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
