நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது



நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த 'FRANCOIS' கப்பல் நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், அதிலுள்ள எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த நான்காவது கப்பலான 'CORINTHIAN' எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எரிவாயுத் தொகுதிகள் கிடைத்ததும், நாடு முழுவதும் விநியோக நடவடிக்கைகள் சீரமைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், சந்தைக்கு அத்தியாவசிய எரிவாயுவை வழக்கம்போல் தடையின்றித் தொடர்ந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோருக்கு உறுதியளித்துள்ளது.