தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு எதிராக இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இரு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றப்பத்திரிகைகள் முறைப்படி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.