பிக்பாஸ் வீட்டில் வனிதாவுடன் மோதிய முனியம்மாள் – தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சரமாரி கேள்வி!

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி தொடங்கியுள்ள நிலையில், நிகழ்ச்சியின் ஆரம்பமே பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், காமன் மேன் போட்டியில் வெற்றி பெற்ற முனியம்மாள், பிக்பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்துள்ளார்.

இந்நிலையில், காமன் மேன் போட்டியின் போது முனியம்மாளுக்கும் வனிதா விஜயகுமாருக்கும் இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

போட்டியின் போது டார்வின், வனிதாவிடம் அவரது திருமணங்கள் குறித்து கேள்வி எழுப்பியதுடன், பல திருமணங்கள் செய்திருந்தாலும் தனது தந்தை விஜயகுமார் பெயரை ஏன் தொடர்ந்து பயன்படுத்துகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த வனிதா, “பெற்றவன் அவன்தானே” எனக் கூறியுள்ளார். தொடர்ந்து மணி என்பவர் அவரிடம், “உங்களுக்கு ஏன் இவ்வளவு திமிரு?” எனக் கேட்க, அதற்கு வனிதா, “நான் விஜயகுமாரோட பொண்ணுடா!” என பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து முனியம்மாள், வனிதாவிடம், “நீங்க ஒரு தமிழ் பெண் தானே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் கோபமடைந்த வனிதா, தமிழை முதலில் சரியாக உச்சரிக்குமாறு முனியம்மாளிடம் கூறியதுடன், தமிழைக் கூட சரியாகப் பேசத் தெரியாமல் கேள்வி கேட்க வந்துவிட்டதாகக் கடுமையாக பதிலளித்துள்ளார்.

அதற்கு முனியம்மாள், தான் தமிழை சரியாகச் சொல்கிறேனா என்பது முக்கியமல்ல என்றும், வனிதாவுக்கு தனது சொந்த வாழ்க்கையைச் சரியாக வாழத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், வனிதாவின் திருமண வாழ்க்கையைச் சுட்டிக்காட்டி, “எதற்காக நான்கு பேரை திருமணம் செய்தீர்கள்?” என மேடையிலேயே கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வனிதா, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச வேண்டாம் என முனியம்மாளை எச்சரித்ததுடன், தனது அடையாளம் குறித்து தனக்கு தெளிவாகத் தெரியும் என்றும் பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 10 ஆரம்பித்துள்ள நிலையில், முனியம்மாள் மற்றும் வனிதா விஜயகுமார் இடையிலான இந்த வார்த்தைப் போர் தொடர்பான காணொளிகளும் கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் தற்போது கவனம் பெற்று வருகின்றன.