அதிவேக நெடுஞ்சாலைகளின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.

 


தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் இடம், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை வெளியேறும் இடம் ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவு பகுதி மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடனும், பொறுமையுடனும் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.