இலங்கை–இந்தியா கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்: ‘சிவகங்கை’ கப்பல் புதன்கிழமை முதல் பயணம்.

 




காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் ‘சுபம்’ நிறுவனத்தின் ‘சிவகங்கை’ கப்பல், எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் K. M. Jayaseelan இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடலில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக சில வாரங்களுக்கு முன்பு கப்பல் பழுதடைந்ததால், காங்கேசன்துறை–நாகப்பட்டினம் பயணிகள் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது தேவையான பழுதுபார்ப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதால், எதிர்வரும் புதன்கிழமை முதல் சேவை மீண்டும் வழமைபோல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த கப்பல் சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் தொடர்ச்சியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களின் பயணச்சீட்டுகளை www.sailsubham.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அல்லது 0212224647 மற்றும் 0117642117 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.