இன்று (10) நிலவரப்படி, அவர் பிரதமர் பதவியில் மொத்தம் 4,399 நாட்களை நிறைவு செய்துள்ளார்.
இந்த முக்கியமான மைல்கல்லை முன்னிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி தனது நல்வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், இந்த சாதனை மோடியின் நீண்டகால சேவையை மட்டுமன்றி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மக்கள் அவரது தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உலகின் பல நாடுகளின் தலைவர்களும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து அவரது தலைமையின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டியுள்ளனர்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1947 முதல் 1964 வரை பணியாற்றிய நிலையில், இந்திரா காந்தி இரண்டு முறை பதவி வகித்து மொத்தம் சுமார் 16 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
நரேந்திர மோடி 2014 மே 26 அன்று முதல் முறையாக பிரதமராகப் பதவியேற்றார். பின்னர் 2019 தேர்தலில் பெரும்பான்மை ஆதரவுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024 இல் மூன்றாவது முறையாகவும் அவர் பிரதமராகத் தெரிவாகினார்.
கடந்த 12 ஆண்டுகளில் வறுமை குறைப்பு, நலத்திட்ட விரிவாக்கம், டிஜிட்டல் கட்டண முறைகள் (UPI) வளர்ச்சி, சாலை–ரயில்–விமான நிலைய உள்கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை வலுப்படுத்தல் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
தனது பயணம் மக்கள் நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார். இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
