மன அழுத்தம் குறைத்து மூளை செயல்திறனை மேம்படுத்தும் எளிய பழக்கங்கள்



 உடல் நலனைப் பேணுவது போலவே, மூளையின் நலனையும் பாதுகாப்பது மிக அவசியம் என மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆரோக்கிய ஆலோசனைகள் தெரிவிக்கின்றன. தினசரி சில எளிய பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

காலை நேரத்தில் சூரிய ஒளியில் சில நிமிடங்கள் செலவிடுவது, மன உற்சாகத்தையும் கவனக்குவிப்பையும் அதிகரிக்க உதவுகிறது.

அதேபோல், Omega-3 fatty acids நிறைந்த உணவுகளை உணவில் சேர்ப்பது மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் என பரிந்துரைக்கப்படுகிறது.

தொலைபேசி, தொலைக்காட்சி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளில் செலவிடும் நேரத்தை குறைப்பது, மூளைக்கு போதிய ஓய்வை வழங்க உதவுகிறது.

மனஅழுத்தத்தை குறைக்க இயற்கையோடு நேரம் செலவிடுதல், தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாகும்.

மேலும், தினசரி போதிய உறக்கம் மற்றும் உடற்பயிற்சி மூளையின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.