அதன்படி, இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் காலை 09.30 மணி முதல் ஆரம்பமாகி பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
காலை 09.30 மணி முதல் 10.00 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையிலான பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மேலும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகள் முன்வைக்கப்படவுள்ளன.
இதனையடுத்து, காலை 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படவுள்ளதுடன், ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் ஒன்பது தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், பிற்பகல் 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான அரசாங்க பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)