கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 1800 போதை மாத்திரைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இணைய சேவையின் ஊடாக பொதிகள் விநியோகிக்கப்படுவதாக கூறி, அதனை மறைவாக பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டுவருவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, பொதி விநியோக சேவையின் மூலம் கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டு யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையம் ஒன்றுக்கு வந்திருந்த சந்தேகத்திற்கிடமான பொதியை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர்.
அந்த பொதியில் 1800 போதை மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
