Election Commission of India கடந்த மார்ச் 15ஆம் திகதி Tamil Nadu சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
பொதுவாக தேர்தல் அறிவிப்பு வெளியான பின் நிர்வாகத் துறையில் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமாகும். அதன்படி, சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக இருந்த Venkataraman மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக Sandeep Rai Rathore தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அதேபோல், தாம்பரம் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர்கள், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாக அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழக தலைமைச் செயலாளராக இருந்த Muruganandam பதவி மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக Sai Kumar புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கேடரின் 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சாய்குமார், 2018ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் Edappadi K. Palaniswami அவர்களின் தனிச் செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக இருந்த Davidson Devasirvatham மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக Sandeep Mittal புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் இடம்பெற்றதாக கூறப்படும் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் K. N. Nehru மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்க Madras High Court உத்தரவிட்டிருந்தது.
மேலும், அமைச்சர் Duraimurugan மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாகவும் Supreme Court of India நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த சூழலில் லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டிருப்பது, தமிழக அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. புதிய டிஜிபியான Sandeep Mittal, 1995 பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். முன்னாள் அதிமுக ஆட்சிக்காலத்தில் Edappadi K. Palaniswami அறிவுறுத்தலின்பேரில் டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு மீண்டும் பணிமாற்றம் செய்யப்பட்டவர் என்றும், சைபர் பாதுகாப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.
