முக்கிய கடல் மார்க்கமாகக் கருதப்படும் Strait of Hormuz பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அமெரிக்க கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக United States Central Command தெரிவித்திருந்த நிலையில், அந்த தகவலை Iran அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கூற்றை நிராகரித்த ஈரான் ஆயுதப் படைகளின் தலைமையகம், அந்தப் பகுதியில் கப்பல்கள் பயணிக்க அனுமதி வழங்கும் அதிகாரம் முழுமையாக ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகளுக்கே உண்டு என வலியுறுத்தியுள்ளது.
மேலும், குறிப்பிட்ட பாதுகாப்பு நிபந்தனைகளின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டு கப்பல்கள் மட்டுமே அந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
அத்துடன், சட்ட விதிகளை மீறி அல்லது அனுமதி இல்லாமல் Strait of Hormuz வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலுக்கும் எதிராக கடுமையான மற்றும் தீர்மானமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு மற்றும் வர்த்தக போக்குவரத்துக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
