கொழுந்துவிட்டு எரியும் இஸ்ரேல் கப்பல்.. ட்ரோன் தாக்குதலால் அடிக்கும் ஈரான்.. - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கொழுந்துவிட்டு எரியும் இஸ்ரேல் கப்பல்.. ட்ரோன் தாக்குதலால் அடிக்கும் ஈரான்..




அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்த ஈரான், உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியமான ஹர்மூஸ் நீரிணையை மூடிய பின்னர், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கப்பல்களின் வருகையைத் தடுக்குமாறு அறிவித்தது. இந்த சூழலில், ஹர்மூஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்த 'MSC Ishika' என்ற இஸ்ரேலிய நிறுவனத்தின் சரக்குக் கப்பலுக்கு ஈரானிய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலின் போது கப்பல் தீப்பிடித்து, பல பணியாளர்கள் உயிர் காக்கும் படகுகள் மூலம் வெளியேறினர். 

இருந்தாலும், கப்பலின் உள்ளே சிக்கியவர்களின் இருப்பால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஈரான் தரப்பின் விளக்கப்படி, இது சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியதற்கான பதிலடி நடவடிக்கை ஆகும். ஈரான் தற்போது இஸ்ரேலியக் கொடி ஏந்திய அல்லது நிறுவன தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால், இந்த சம்பவத்தும் அதே தொடர்ச்சியாகவே நிகழ்ந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேலியக் கப்பல்கள் மீதான எதிர்கால தாக்குதல்கள் பொறுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் பின்னர் ஹர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.