எட்டவீரகொல்லேவில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

 



எட்டவீரகொல்லேவகோன்கொல்லேவ பிரதேசத்தில் கைக்குண்டு, துப்பாக்கித் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எட்டவீரகொல்லேவ பொலிஸ் நிலையம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு கைக்குண்டு, 52 T-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் 30 ஒன்பது மில்லிமீட்டர் (9mm) ரகத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், எட்டவீரகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது எட்டவீரகொல்லேவ பொலிஸார் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.