உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி...... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி......




Donald Trump அறிவித்த இரண்டு வார கால போர்நிறுத்தம் காரணமாக, உலகளாவிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன.

இன்று காலை 5.45 மணி நிலவரப்படி வெளியிடப்பட்ட சந்தை தகவல்களின் படி, West Texas Intermediate (WTI) Crude Oil பீப்பாய் ஒன்றின் விலை 95.47 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 17.48 டொலர் குறைவு, அதாவது 15.48 சதவீத சரிவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், Brent Crude Oil வகை கச்சா எண்ணெய் விலையும் குறைந்து, ஒரு பீப்பாய் 92.84 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், Murban Crude Oil விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது. அந்த வகை கச்சா எண்ணெய் 106.51 அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாகவும், இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 18.85 சதவீத வீழ்ச்சியாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச அரசியல் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குறிப்பாக போர் நிறுத்த அறிவிப்புகள் மற்றும் பதற்றக் குறைவு, உலக சந்தைகளில் எரிசக்தி விலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்...