Air India நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பணியாற்றி வந்த Campbell Wilson திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Tata Group குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை 2022 ஜூலை மாதம் முதல் வழிநடத்தி வந்த வில்சன், 2027 ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர வேண்டியிருந்த நிலையில் முன்கூட்டியே விலகியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
செய்தி தகவல்களின் படி, கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி Ahmedabad நகரில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, வில்சன் கடும் விமர்சனங்களையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
New Zealand நாட்டைச் சேர்ந்த 55 வயதுடைய கேம்ப்பெல் வில்சன், விமானப் போக்குவரத்து துறையில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அவர் இதற்கு முன்பு Scoot என்ற விமான சேவை நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், Turkish Airlines நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Ilker Ayci ஏர் இந்தியா தலைமைப் பதவியை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, கேம்ப்பெல் வில்சன் CEO மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது ராஜினாமா தொடர்பாக Air India நிறுவனம் இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
