ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, விமானப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமானங்கள், விமான நிலைய பணியாளர்கள் மற்றும் நாட்டின் நிலப்பரப்பின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
