எரிபொருள் வரி தற்காலிக ரத்து – வியட்நாம் முடிவு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

எரிபொருள் வரி தற்காலிக ரத்து – வியட்நாம் முடிவு




உலகளாவிய எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு, எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில வரிகளை தற்காலிகமாக நீக்க Vietnam அரசு தீர்மானித்துள்ளது.

Reuters வெளியிட்ட தகவலின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி மற்றும் விசேட கொள்வனவு வரி ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஈரானை மையமாகக் கொண்டுள்ள போர் நிலைமையால், உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் உள்நாட்டு பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வியட்நாம் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வரி தளர்வு, பெற்றோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் உள்ளிட்ட முக்கிய எரிபொருட்களுக்கு பொருந்தும். மேலும், இந்த சலுகை எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.