ஈரானின் தலைநகரில் கடும் வான்வழித் தாக்குதல் – நகரம் முழுவதும் அதிர்ச்சி நிலை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஈரானின் தலைநகரில் கடும் வான்வழித் தாக்குதல் – நகரம் முழுவதும் அதிர்ச்சி நிலை





ஈரானின் தலைநகர் தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிரமான வான்வழித் தாக்குதல்களைச் சந்தித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த குண்டுவீச்சு சம்பவங்களால் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் தெஹ்ரான் மாநகரம் அதிர்ந்து போயுள்ளது. தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள், தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளில் கனரக வெடிகுண்டுகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்டடங்களின் ஜன்னல்கள் மற்றும் தரை அதிர்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். 

செவ்வாய்க்கிழமை என்பது ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் மிகத் தீவிரமான நாளாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார். இந்தநிலையில், தெஹ்ரான் மட்டுமின்றி, இஸ்ஃபஹான் மற்றும் கரஜ் போன்ற முக்கிய நகரங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. மின்சார உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்ததால் நீல நிற ஒளிப்பிழம்புகள் வானில் தோன்றியதோடு, நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. சில மணிநேரங்களில் மின்சாரம் சீர்செய்யப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, தெஹ்ரான் போன்ற நகரங்களில் முறையான பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் இல்லாதது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.