சவுதி எச்சரிக்கை – “தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை” - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

சவுதி எச்சரிக்கை – “தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை”




சவுதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்கு உரிமை உண்டு என சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார். ரியாத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இவ்வாறான தாக்குதல்கள் மூலம் டெஹ்ரான் எவ்வித நன்மையையும் அடையப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். 

 ஈரான் தனது அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விட, அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கவே முயற்சிப்பதாக இளவரசர் பைசல் மேலும் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், இந்த அணுகுமுறை ஒருபோதும் வெற்றியளிக்காது என்பதுடன், இது அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் ஈரானுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.