மத்திய கிழக்கு போரை நிறுத்த பேச்சுவார்த்தை... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மத்திய கிழக்கு போரை நிறுத்த பேச்சுவார்த்தை...




ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்டார் பிரதமர் மற்றும் வெளி விவகார அமைச்சரான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்தானி, எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டியுடன் (Badr Abdelatty) தொலைபேசி வாயிலாக அவசர உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இராணுவ மோதல்கள் குறித்தும், அதன் விளைவாக சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தல்கள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்துள்ளனர்.

கட்டார் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்த ஷேக் முகமது, வன்முறைச் செயல்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.போரைத் தீவிரப்படுத்துவது எதற்கும் தீர்வாகாது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று, எகிப்து வெளி விவகார அமைச்சர் அப்தெலாட்டியும், பிராந்தியத்தில் நிலவும் குழப்பமான சூழலைத் தவிர்க்கவும், மேலும் உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் இராணுவ நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டு, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.