டுபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்....... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

டுபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்.......




டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் தற்போதைய நிலையில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.