ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய நிலையை மேலும் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, இந்த தாக்குதல் இடைநிறுத்தம் மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது Truth Social சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா மற்றும் Iran ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவை முன்னேற்றமான மற்றும் சாதகமான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த முன்னேற்றம், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கும் ஒரு நேர்மையான சிக்னலாகக் கருதப்படுகிறது.
