சுமார் 180 மாலுமிகளுடன் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக் கப்பலான “ஐரிஸ் தேனா”விலிருந்து சுமார் 30 மாலுமிகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.
மீட்கப்பட்ட மாலுமிகள் கராப்பிட்டி மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தினார்.
முந்தைய செய்தி!
காலி கடற்கரையில் ஈரானிய கப்பல் விபத்துக்குள்ளானது!
மீட்புப் பணி நடைபெற்று வருகிறது!!
காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலுக்கு உதவ இலங்கை கடற்படை நடவடிக்கை.
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.
அத்தோடு அந்தக் கப்பலில் இருந்த 30 தொடக்கம் 35 வரையான மாலுமிகளை பாதுகாப்பாக இலங்கை அழைத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது!
