புத்தளம், மாரவில பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக வீட்டின் படுக்கையறையில் கணவர் கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
மனைவி கொலை
கொலையில் பலியானவர் துஷாரி என்ற 44 வயது பெண்ணாகும்.
தற்போது தப்பிச் சென்றுள்ள சந்தேக நபரான கணவரை கைது செய்ய மாரவில பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இன்று நீதவான் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


