இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலம் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பு... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலம் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பு...

 விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.




அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த விசா கால நீடிப்புக்காக வெளிநாட்டவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தியுள்ளார்.