மகளை கள்ளகாதலனுக்கு இரையாக்கிய தாய்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மகளை கள்ளகாதலனுக்கு இரையாக்கிய தாய்!




இந்தியாவின் சென்னை சாலிகிராமம், பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பாதுகாவலர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது மனைவி மற்றும் 20 வயது மகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். பாதுகாவலர் தான் வேலை பார்க்கும் இடத்தில் தங்கி வேலை பார்த்து வருவதால் வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். 

இதற்கிடையே அவரது மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து கணவன் இல்லாத நேரத்தில் அடிக்கடி அந்த நபர் வீட்டுக்கு வந்து பாதுகாவலரின் மனைவியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையறிந்த கணவன் தனது மனைவியை பலமுறை கண்டித்தும் அவர், கள்ளத்தொடர்பை கைவிட மறுத்துவிட்டதாக தெரிகிறது.

 இந்நிலையில் தாயின் நடவடிக்கையால் விரக்தி அடைந்த மகளும் தாயுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 03 ஆம் திகதி உடல்நலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு தாய் தூக்க மாத்திரை வாங்கி வந்து கொடுத்துள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அசந்து தூங்கிவிட்டார். பின்னர் கண்விழித்து பார்த்தபோது தன்னை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்த மகள்  இது குறித்து  தாயிடம் வினவிய போது ஒன்றும் இல்லை, எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி சமாளித்துள்ளார்.. 

 இந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். அவர் அசந்து தூங்கியபோது தாயின் கள்ளக்காதலன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்து அலறி கூச்சலிட்டுள்ளார். 

 இதையடுத்து மகளை கண்டித்த தாய் இதுபற்றி வெளியே ஏதும் சொல்லக்கூடாது என்று கூறி ஒரு அறையில் போட்டு மகளை பூட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் தாயின் பிடியில் இருந்து தப்பிய மகள் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். 

இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை அரச வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அவர் 7 வார கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.  பிறகு இளம்பெண்ணின் சம்மதத்துடன் வைத்திய குழுவினர் கர்ப்பத்தை கலைத்துள்ளனர். இந்த நிலையில் பெற்ற மகள் என்றும் பாராமல் தூக்க மாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி வயது (50) இருவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்யாறு மகளிர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.