இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் தனுஷின் தீவிர ரசிகை என மிருனாள் தாகூர் பேசி இருக்கிறார்.
நான் தனுஷின் மிக மிக தீவிர ரசிகை. அசுரன் படத்தை தான் பல முறை பார்த்திருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் பார்ப்பேன் என கூறி இருக்கிறார். அவரது நடிப்பை அப்படி வியந்து பார்ப்பேன், அவருடன் எப்போதாவது நடிப்பேன் என்கிற ஆசையும் இருக்கிறது என மிருனாள் கூறி இருக்கிறார்.
Son Of Sardaar 2 பட ஸ்கிரீனிங் நிகழ்ச்சிக்கு வரும்படி அவர் தேரி இஸ்க் மேன் ஷூட்டிங்கில் இருக்கும்போது அழைத்தேன். அவர் வருவார் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர் வந்தபோது நான் அதிகம் மகிழ்ச்சி ஆகிவிட்டேன் என அவர் கூறி இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது குறிப்பிடத்தக்கது.
