இரகசிய தகவலில் கட்டுநாயக்கவில் சிக்கிய இளைஞன் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இரகசிய தகவலில் கட்டுநாயக்கவில் சிக்கிய இளைஞன்

 கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது, சந்தேக நபரிடமிருந்து, 108 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 68 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேக நபர் ஜா-எல பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.