டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை புரட்டிப்போட்ட மேற்கிந்திய தீவுகள்: 30 ஓட்டங்களில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பையின் 15 வது லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் - இங்கிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

 இதனால் முதலில்  துடுப்பாட்டத்தி்ல் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் குவித்தது. 197 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவிலேயே 166 ஓட்டங்கள் மட்டும் குவித்து ஆல் அவுட் ஆனது. 

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 33 ஓட்டங்களும், பிலிப் சால்ட் 31 ஓட்டங்களும் குவித்தனர். கடைசி வரை அணியை மீட்க போராடிய சாம் கர்ரன் 43 ஓட்டங்கள் குவித்தார். 

ஆனால் இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மேற்கிந்திய


தீவுகளுக்காக அசத்தினார்.