2023 டிசம்பரில் Sarvam AI, Lightspeed, Peak XV Partners, Khosla Ventures ஆகிய நிறுவனங்களிடமிருந்து 41 மில்லியன் அமெரிக்க டாலர் Series A முதலீடு பெற்றது. இந்த முதலீடு, இந்தியாவின் AI ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டை உலகளாவிய அளவில் முன்னேற்றும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
Sarvam AI பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. இந்திய மொழிகளில் திறமையாக செயல்படும்
Large Language Models (LLMs), 22 இந்திய மொழிகளில் 35 குரல்கள் கொண்ட Bulbul V3 Text-to-Speech மாடல், ஆவணங்களை வாசிக்கும் திறன் கொண்ட Sarvam Vision OCR ஆகியவை குறிப்பிடத்தக்கவை. Google Gemini மற்றும் ChatGPT போன்ற உலகளாவிய AI மாடல்களை விட அதிக துல்லியத்துடன் செயல்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அறிமுகமான Sarvam Edge, இணையம் இல்லாமல் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்-களில் இயங்கும் AI மாடலாகும். இது Speech recognition, translation, text-to-speech போன்ற வசதிகளை வழங்குகிறது. 10 இந்திய மொழிகளில் இயங்கும் இந்த மாடல், தனியுரிமை, வேகம் மற்றும் அனைவருக்கும் அணுகல் என்பதில் கவனம் செலுத்துகிறது.
Sarvam AI தற்போது வங்கி, கல்வி, அரசு சேவைகள் போன்ற துறைகளில் வேகமாகப் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தொழில்நுட்ப சுயாட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
