கேகாலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவி குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவியே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார்.
இந்த மாணவியின் தந்தை சிறிது காலத்திற்கு முன்னர் உடல் நல பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மாணவியின் சகோதரன் குடும்ப வறுமை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளார்.இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பாடசாலை செல்லும் மாணவன் ஒருவருடன் குறித்த மாணவிக்கு காதல் தொடர்பு ஏற்பட்டமையால் தாய்மை அடைந்துள்ளார்.
குழந்தை பிரசவித்த மாணவியை சாதாரண தர பரீட்சை எழுதுவதற்காக வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த குழந்தை பிரசவிக்க காரணமாக இருந்த காதலனை பொலிஸார் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
