உடன் வெளியேறவும்!அவசர எச்சரிக்கை..... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

உடன் வெளியேறவும்!அவசர எச்சரிக்கை.....

 


அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 

அந்த வகையில் 12,301 வீடுகள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த வீடுகள் மக்கள் வாழ்வதற்கு பொருத்தமற்றது என்பதால் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



தொடருந்து பாதைகள்

இதனிடையே, டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட தொடருந்து பாதைகளைச் சீரமைப்பதற்குத் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தொடருந்து அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொடருந்து சேவையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கு உரிய திட்டங்கள் இல்லாதமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.