வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்...

 54 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த ஒருவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 




இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தல்துவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வர்த்தகர் ஒருவராவார். 

சந்தேக நபர் நேற்று (28) இரவு 07.30 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-652 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36,000 வெளிநாட்டு சிகரெட்டுகளைக் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.