'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவிப்பு.....

 இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

 

அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

ரயிலில் மோதியதையடுத்து, குறித்த கெப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும், குறித்த ரயில் கடவையில் முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.