இந்திய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் பயணத்தில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், அண்மையில் இந்தியாவின் கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பலர் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது விபத்தாகவே பார்க்கப்பட்ட போதிலும் தவெக தலைவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சதி எனவும் கரூர் கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டே அவ்வாறு நெருக்கடியான இடம் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.இதற்கிடையில் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரான விஜய் திரையுலக நடிகர் என்ற ரீதியில் அவர் மேற்கொண்டு வரும் தனிப்பட்ட விவகாரங்களில் தற்போது, ஆளும் கட்சி சதி செய்வதாக பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
