இலங்கையில் பிறக்கும் சில குழந்தைகளுக்கு இதயத்தில் ஏற்படும் மாற்றம்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இலங்கையில் பிறக்கும் சில குழந்தைகளுக்கு இதயத்தில் ஏற்படும் மாற்றம்!

 இலங்கையில் புதிதாக பிறக்கும் சில குழந்தைகளின் இதயத்தில் வேறுபாடுகள் ஏற்படலாம் என வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது இலங்கையில் புதிதாக பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஆறு குழந்தைகளுக்கு இதயத்தில் வேறுபாடுகள் ஏற்படலாம் என சிறுவர் வைத்திய நிபுணர் மலித் த சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றங்களில் இதயத்தில் ஓட்டை ஏற்படுவது அதிகமாகும்.ஆனால் அது தொடர்பில் சிறுவர் வைத்திய நிபுணர்களுக்கு அறியப்படுத்தி சத்திர சிகிச்சை மூலம் அதை நிவர்த்திக்கலாம்.இவ்வாறான சத்திர சிகிச்சைகளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மட்டுமே செய்ய முடியும்.

இரத்த உறவில் நடக்கும் திருமணம் மற்றும் சிறுவயதில் தாய்மை அடைதல் போன்ற காரணங்களால் இதயத்தில் ஓட்டை ஏற்படுவதற்கான காரணங்கள் அதிகம் என தெரிவிக்கும் வைத்தியர், இதற்கு வேறு காரணங்களும் உண்டு என்கிறார்.தற்போது சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மூன்று சத்திரசிகிச்சை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.புதிய சிறுவர் வைத்தியசாலைக்
கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் மேலும் சத்திரசிகிச்சை கூடங்கள் அதிகரிக்க கூடும்.

ஒரு வருடத்தில் 800 சத்திர சிகிச்சைகள் நடைபெறுவதாக தெரிவித்த வைத்தியர்,இதை ஆரம்பத்தில் அறிந்து கொண்டால் குணப்படுத்துவது இலகுவானதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

About UPDATE