அநுராதபுரம், மாத்தளை சந்தி பகுதியில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரின் வீட்டில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
